" மாமிச உணவை கைவிட்டு, சைவ உணவிற்கு மாறிவிட்டேன் "

 

 

என் பெயர் ஆனந்தி. நான் மூன்று வருடங்களாக ‘ஆனாபானசதி’ தியானப் பயிற்சி செய்து வருகிறேன். சிவகாமி மேடம் அவர்களால் தியானப் பயிற்சியில் நுழைந்தேன். முன்பு எனக்கு இருதய நோய் இருந்து வந்தது. தொடர்ந்து தியானம் செய்வதன் மூலமாக நான் குணமடைந்துள்ளேன். மருந்து மற்றும் மருத்துவத்தை முற்றிலுமாக விட்டு விட்டேன். மாமிச உணவை கைவிட்டு, சைவ உணவிற்கு மாறிவிட்டேன். பிரமிட் தியானத்தின் மூலம் பல நன்மைகளை அடைந்தேன்.உலகமெல்லாம் இலவசமாக தியானத்தை பரப்பிக் கொண்டிருக்கிற பத்ரிஜி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொட்டியத்தில் பற்பல குருமார்கள் தியானத்தை கற்றுக் கொடுத்தார்கள். பத்ரிஜி அவர்கள் மீண்டும் தொட்டியம் நகருக்கு வருகை தருவதை அனைத்து தியான மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

 

D.ஆனந்தி

திருச்சி

Go to top