" ஒரு மகானின் பிறப்பு "

 

என் பெயர் கே.வரலட்சுமி. எனது ஊர் விஜயவாடா. நான் 1998 உடல் உபாதையினால் தவித்தேன். குணம் கிடைக்க வழித்தேடி தியானத்தை ஆரம்பித்தேன். 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் தியான சாதகம் செய்து பூரணமாக நலம் அடைந்தேன். நான் புலால் உணவை சாப்பிடுவதை விட்டுவிட்டு, லட்சக்கணக்கானவர்களுக்கு தியானத்தை கற்பித்து, அவர்களும் புலாலை விட்டுவிட்டு சைவ உணவை மேற்கொள்ளும்படி செய்தேன். இந்த தியானத்தின் மூலமாக என் அக உலக பிரயாணத்தில் பல மேலுலக ஆசான்களை சந்தித்து, அவர்களின் ஞானத்தையும் டெலிபதி மூலமாக பத்ரிஜியிடம் சந்தேகங்களை தீர்த்துக் கொண்டு இல்லற வாழ்க்கையை, முறையாக, ஆனந்தத்துடன் வாழக் கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டு இருக்கிறேன்.

 

பத்ரிஜி ஒரு மாபெரும் செல்வம். அவரை முழுவதுமாக புரிந்து கொள்வது என்பது என் பார்வையில் மிகவும் கடினம். அவரைப் படிப்படியாக இன்னும் புரிந்து கொண்டு இருக்கிறேன். அவர் இப்பூமியில் ஏன் பிறவி எடுத்தார்? மேலுலகங்களில் அவரின் நிலை என்ன? என்பதை நான் அறிந்து கொண்டது என் முற்பிறவிகளின் புண்ணியம். ஒருமுறை தியானத்தில் பத்ரிஜியின் பிறவிப்பயனை தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இவ்வுலகம் முழுவதும் அஞ்ஞானத்தில் மூழ்கியிருக்கிறது. "நான்" என்றால், இவ்வுடல் எனும் மாயையில் சிக்கி இருக்கும் மனித இனத்தை, அந்நிலையில் இருந்து வெளியில் கொண்டுவர மேலுலக ஆசான்கள் பல முயற்சிகள் செய்து, பலனில்லாமல் கடினம் என நினைத்து முயற்சியை கைவிட்டு விட்டார்கள்.

 

பூமியில் காட்டு விலங்குகளின் மரண வேதனை, செல்லமாக வளர்க்கப்படும் பிராணிகளின் சங்கரம், கடல் வாழ் உயிரினங்களின் அவல நிலை. இவையனைத்தும் மனித இனத்திற்கு சாபமாக மாறி, பெரும் சுனாமிகளால் இவ்வுலகம் அழியும் தருணத்தில் ஒளி ரூபம் கூடிய தேகத்தைக் கொண்ட ஒரு மகான், மிகுந்த கருணையுடன், அளவில்லா பாசத்துடன் இவ்வுலகை ஒருமுறை பார்த்தவுடனேயே இந்நிலைக்குக் காரணம் புரிந்துவிட்டது. இவ்வுலகத்தின் இன்னல்களுக்கும், அழிவுகளுக்கும் மனித இன சரிவு நிலைக்கும் காரணம் "நான்கு அங்குல நாக்கு". இந்நாக்கின் சுவைக்காகவே இவ்வளவு ஜீவ இம்சை பூமியில் நடக்கிறது. அவரவர் சிற்றறிவிற்கு புலப்படும் தேவையற்ற பேச்சினால் அழிவை உண்டாக்குகிறார்கள். மனித நாக்கிற்கு பீடை ஏற்பட்டிருக்கிறது. இதை முதலில் அகற்ற வேண்டும். வயலுக்கு பூச்சி பாதிப்பு ஏற்பட்டால் மருந்து அடித்து, பயிரை எப்படி காப்பாற்றுகிறோமோ, அதேபோல், நம் நாக்கை காப்பாற்ற வேண்டும். "உத்தரேதாத்மானாத்மானாம்" என்றார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. அவரவர் ஆன்மாவை அவரவரே உயர்த்திக் கொள்ள வேண்டும். தன்னைத்தான் அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால், நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும். சைவ உணவையே மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் மனித இனமே அழிந்துவிடும். "இது சத்தியம்". இதற்காகவே பூமியில் ஒளிரூபம் கூடிய தேகத்தை கொண்ட ஒரு மகானின் பிறப்பு ஏற்பட்டுள்ளது.

 

அந்த ஒளி ரூபமே "பிரம்மர்ஷி பத்ரிஜி"யாக பிறவி எடுத்திருக்கிறார். அவர் பூமிக்கு வந்தபிறகு "சுவாசத்தை கவனித்தல்" என்ற மருந்தை உபயோகிக்க தொடங்கினார். பத்ரிஜிதான் பிரமிட் தியானத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர். இத்தியானத்தினால் லட்சக்கணக்கானோர், தம் நாக்கின் பீடையை அகற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் அகற்றி கொண்டே இருக்கின்றனர். புலால் உணவை விட்டுவிட்டு தம் நாக்கை சரி செய்து கொள்வதால், தம்மைத்தாம் காப்பற்றிக் கொள்வது மட்டுமல்லாமல், மனித இனத்தையே காப்பாற்றுகிறார்கள். பத்ரிஜியின் பிறப்பினால் இவ்வுலகம் புனிதம் அடைந்திருக்கிறது. இவ்வுலகத்தில் உள்ள அனைவருக்கும் தியானத்தை, சைவ உணவின் முக்கியத்துவத்தைத் தெரிவிப்பதற்காகவேதான் "பிரமிட் ஆன்மிக இயக்கம்" மற்றும் "பிரமிட் பார்ட்டி ஆஃப் இந்தியா" (PPI) என்னும் அரசியல் கட்சியையும் ஆரம்பித்து அனேக இன்னல்களையும், அவமானங்களையும் தாங்கிக்கொண்டு உலக நன்மைக்காக பிரச்சாரம் செய்கிறார் பத்ரிஜி. இந்த பிரச்சாரத்தில் நம் பங்கை நாம் நிறைவேற்றினால் 'உலக நன்மைக்கு' நம்முடைய கடமையை நிறைவேற்றியதாகும். நம் ஆன்ம பயணத்தில் இது ஒரு முக்கியமான பொறுப்பு. இந்தப் பிறவியை இறுதி பிறவியாக ஆக்கிக் கொள்ள நமக்கு இந்த வாய்ப்பை அளித்த பத்ரிஜிக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது. மேலுலகங்களில் இருக்கும் "காஸ்மிக் பார்ட்டி" என்பது பிரமிட் பார்ட்டியாக இவ்வுலகத்தில் உருவாகியுள்ளது. 2012க்குள் இந்த அவகாசத்தை உபயோகித்துக் கொண்டு எல்லோரும் பிறவிப்பயனைப் பெறுங்கள்.

 

கே. வரலட்சுமி

விஜயவாடா

Go to top