" தியானமும், கல்வியும் "

 

நான் பத்தாம் வகுப்பு படிக்கின்றேன். தியானம் தொடங்கிய பிறகு, என் படிப்பில் மிகப் பெரிய மாற்றத்தைக் கண்டேன். ஞாபகசக்தி அதிகரித்துள்ளது. பிறரிடம் எளிதாக, அன்புடன் பழக முடிகிறது. முன்பு, என் கையெழுத்து சரியாக இல்லை என்று ஆசிரியர் குறை கூறினார்கள். மோசமான கையெழுத்தினால், மதிப்பெண்கள் குறைந்தன. ஒரு முறை ஆசிரியர் ஸ்ரீதேவி அவர்கள், எனக்கு தியானப் பயிற்சி அளித்தார்கள்.


தியானத்தால், என் கையெழுத்தில் முன்னேற்றம் தெரிந்தது. அன்று முதல் நான் தொடர்ந்து தியானம் செய்து வருகிறேன். இப்போது தேர்வில் மதிபெண்கள் ஆதிகமாக எனக்குக் கிடைத்துள்ளன. எனக்கு ஒரு முறை என் பாட்டி, என் தங்கை இவர்களைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது. அவர்கள் உயிருடன் இல்லை. என்றாலும், அவர்களை நான் பார்க்க வெண்டும் என்று தியானம் செய்தேன். இருவரையும் மூன்றாம் கண்ணால் பார்க்க இயன்றது. அப்போது என் பாட்டி என்னை ஆசீர்வதித்தார். தியானம் செய்யத் தெரியாத பல மாணவர்களுக்குக் கற்று கொடுத்துள்ளேன். தியானத்தின் மீது ஒரு பாட்டுகூட எழுதி உள்ளேன்.

 

"வாயில்லா ஜீவன்களை வதைப்பது பாவம்,
அசைவம் உட்கொள்வது மகா பாவம்,"

 

என்று தியானத்தால் தெரிந்துக் கொண்டேன்.

 

அனைவரும் தியானம் செய்து, பிறர்க்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது இந்த தியானியின் கருத்து.

 

 

செல்வி. கைசர்பேகம்

புரசைவாக்கம், சென்னை

Go to top