" பிரமிடின் மகிமை "

 

என் பெயர் M.S. பழனிகுமார். நான் சிறு வயதிலிருந்தே முன்கோபக்காரன். பணத்தை ஈட்டுவதில் ஈடுபாடு அதிகமாக இருந்தது. மனைவி, குழந்தை யாராக இருந்தாலும் சரி கோபம் வந்துவிட்டால், யாரையும் மதிக்க மாட்டேன். என்னுடைய குழந்தைகளை மிகுந்த பயபக்தியுடன் வளர்த்தேன். எனக்கு 2 பெண்கள் ஒரு ஆண். அவர்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. பக்திமார்க்கத்தில் இருந்தேன். என்னுடைய மகன் ஜெய்குமார், தியானமார்கத்தில் இருந்ததால், என்னையும் 'தியானம் செய்யுங்கள்', என்றான். அதன்படி நானும் தியானம் செய்ய ஆரம்பித்தேன். நாங்கள் திருவல்லிக்கேணியில் ஒரு பிரமிட் திறப்பு விழாவிற்குச் சென்றிருந்தோம். அதைப் பார்த்ததும் நம் வீட்டிலும் பிரமிட் கட்டவேண்டும் என்ற ஆர்வம் வந்தது. உடனே எங்கள் வீட்டிலும் 12'/12' 'பிரமிட்' கட்டினோம். அது எம் குருவான பத்ரிஜி அவர்களால் திறக்கப்பட்டு, "நாராயணா பிரமிட் தியான மந்திரம்" என்று பெயரிடப்பட்டது. பக்தி மார்க்கத்தில் இருந்த என்னை ஆன்மிக மார்க்கத்திற்கு மாற்றியது, என் மகன்தான். எங்கள் வீட்டின் பூஜை அறையையே எடுத்து விட்டேன் என்றால், அது ஆன்மிகத்தின் சக்திதான். தியானத்தில் கிடைத்துள்ள ஆனந்தம் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. பக்தி மார்கத்தில் இருக்கும் வரை இது எனக்குக் கிடைக்கவில்லை. தியான வகுப்புகள் நடக்கும் போது அவற்றில் பங்கேற்று, ஆனந்தமடைவேன். தியான மார்க்கத்தில் வருவதற்குமுன்பு எனக்கு இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் எல்லாம் இருந்தன. தியானம் செய்யச் செய்ய இவையெல்லாம் இயல்பு நிலையை அடைந்தன. இப்பொழுது என் மனம் மிகவும் அமைதியாகவும், நிம்மதியாகவும் இருக்கிறது. இவ்வுலகத்தில் வாழும் ஒவ்வொருவரும் தியானம் செய்ய வேண்டும் என்று சங்கல்பம் செய்துக்கொண்டு தியானத்தில் அமர்வேன்.

 

 

M.S. பழனிகுமார்

சென்னை

Go to top