" அனைவரும் தியானம் செய்து, என்னைப்போல் ஆனந்தமாக வாழுங்கள் "

 

என் பெயர் மாலதி. எனக்கு 2 பெண் குழந்தைகள். நாங்கள் சென்னையிலுள்ள கோயம்பேடு கேம்ஸ் வில்லேஜில் இருக்கிறோம். நான் 3 வருடங்களாக தியானம் செய்கிறேன். தியானத்திற்கு வரும்முன் எனக்கு நிறைய ஆரோக்கியக் குறைபாடுகள் இருந்தன. 'ஆர்த்தரைடீஸ்' நோயினால் கால்வலியுடன் என்னால் உட்கார்ந்து, எழக் கூட முடியாது. இன்னும் அல்சர், சைனஸ், ஸ்பான்டிலைட்டீஸ் மற்றும் ஆஸ்மாவுடன் அவஸ்த்தைப் பட்டுக் கொண்டிருந்தேன். எப்பொழுதும் மருத்துவர்களை நாடுவது, மருந்துகள் உட்கொள்வது, இதுதான் வேலை. வீட்டு வேலையை செய்ய முடியாமல் குழந்தைகளை கவனிப்பதும் சிரமமாக இருந்தது.

 

விருந்தாளிகளையும் கவனிக்க முடியவில்லை. முழுமையான 'மென்டல் டிப்ரஷன்' ஆகிவிட்டது. சிறிய பிரச்சனைகளைக் கூட சமாளிக்க முடியாமல் போனது. என் காலனியில் உள்ள கீதா மேடம் என் நிலையைப் பார்த்து தியானம் கற்பித்தார். தியானம் ஆரம்பித்து 5வது நாளில் சைவ உணவு உட்கொண்டால் தியானம் சிறப்பாக அமையும் எனக் கேள்விப்பட்டு, சைவ உணவிற்கு மாறினேன். அடுத்த நாளே, மூன்றாம் கண் எழுச்சி பெற்று அநேக குருமார்களுடன் உரையாடலும், இயற்கையிடம்கூட தகவல்கள் பரிமாற்றம் கிடைக்கப்பெற்றேன். இதுபோல அநேக அனுபவங்களை தியானத்தில் பெற்றேன். தியானம் ஆரம்பித்த சில நாட்களிலேயே மனநலம் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியடைந்தேன். என் இளைய மகள் ரக்னிதாவிற்கு ஆஸ்துமா இருக்கிறது. எல்லாவிதமான ஆரோக்கிய குறைபாடுகளுடன் இருந்தன. ஆங்கில, ஹோமியோ, சித்தா மருத்துவங்கள் பயனற்று போய்விட்டன. பின்னர், 'கீதா மேடம், குழந்தைகளும் தியானம் பழகினால் அவர்களுக்கும் உடல் ஆரோக்கியம் கிடைக்கும்' என்றார்.

 

நான், 'அவளுக்கு 5 வயதுதானே ஆகிறது, எப்படி ஒரு இடத்தில் அமருவாள்?' என்று கேட்டேன். "நம்மைவிட குழந்தைகளுக்கு தியானம் நல்ல பயனைத் தரும்" என்றார். ஆச்சரியமாக இருந்தது எனக்கு. என் மகளுக்கு 3வது நாளே மூன்றாம் கண் எழுட்சியடைந்து சிலநாட்களில், 'ஆஸ்துமா' வியாதி குணமாகிவிட்டது. அவள் தியானத்தில், பெரும் மகானான மகா அவதார் பாபாஜியுடன் விளையாடும் அனுபவம் எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர் அவள் பள்ளியிலோ, வீட்டிலோ சொல்லித் தராத பாடங்களைக்கூட தெளிவாகக் கூற ஆரம்பித்ததைப் பார்த்து நாங்கள் வியப்படைந்தோம். இப்பொழுது அவள் நான்காம் வகுப்புப் படிக்கிறாள். படிப்பிலும் கெட்டிக்காரியாகி ஹிந்தியில் 'ப்ராத்மிக்', 'மத்யமா' முடித்துவிட்டு, 'ராஷ்டிரபாஷா' படிக்கிறாள்.

 

ஆரோக்கியம், படிப்பு, ஞாபகசக்தி அனைத்தும் முனேற்றமடைந்துள்ளாது. என் குழந்தைகள் தினமும் 15 நிமிடத்திலிருந்து 20 நிமிடங்கள் வரை கண்டிப்பாக தியானம் செய்கிறார்கள்.

 

என் அம்மா ஊராகிய பீமவரத்தில் தட்டவர்த்தி வீரராகவராவ் அவர்கள் நடத்துகின்ற 3 நாள் ஆத்ம ஞான வகுப்பிற்கு (Workshop) சென்றேன். அவரது வகுப்பிற்குப் பிறகு நாமும் மற்றவர்களுக்கு தியானம் கற்பித்தால் அவர்களும் பலனடைவார்கள் என்று கருதி, நானும் பிறருக்கு தியானம் கற்றுக் கொடுக்கிறேன். "ஸ்ரீசைல தியான யக்ன"த்தில் எனக்கு நிறைய தியான அனுபவங்கள் கிடைத்தன. பூர்வ ஜன்மங்களில் செய்த பாவத்தினால்தான் இப்பிறவியில் ஆஸ்துமா மற்றும் சில பிரச்சினைகள் வந்தன என்று புரிந்து கொண்டேன். நமக்கு எந்த பிரச்சனைகளோ, நோயோ எது வந்தாலும் முற்பிறவிகளில் நாம் செய்த பாவங்கள்தான் காரணம் எனப்புரிந்து கொண்டேன். நம் பிரச்சனைகளுக்கும், துன்பங்களுக்கும் வேறு யாரும் காரணம் அல்ல என்ற சத்தியத்தைப் புரிந்து கொண்டேன்.

 

இந்த அனுபவத்தின் மூலமாக வாழ்க்கையில் எனக்கு வரும் எந்தவிதமான பிரச்சனைகளையும் தியானத்தின் மூலமாக சமாளிக்க முடியும் என்கிற மன தைரியம் கிடைத்தது. பத்ரிஜியின் மேற்பார்வையில் நடைபெறும் தியான யக்ஞத்திற்கு வந்தவர்கள் தங்களுடைய எத்தனையோ ஜன்ம கர்மங்களை எரித்திருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் செய்யும் "ட்ரெக்கிங்" (காட்டில் பயணம்) கூட, அதற்காகத்தான் என அனுபவபூர்வமாகப் புரிந்து கொண்டேன். எல்லோரும் இதுபோன்ற தியான யக்னத்தில் பங்கு பெற்று தங்களுடைய 'கர்மா'வை எரித்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

 

எனக்கு 2010 ஜுலையில் இதய துடிப்பு பிரச்சனை ஏற்பட்டு கணவரின் வற்புறுத்தலால் மருத்துவரிடம் சென்றேன். டாக்டர் 'மாஸ்டர் செக்கப்' செய்து ரிப்போர்ட் கொண்டு வரச்சொன்னார். நாங்கள் ஒரு வாரம் கழித்து வர அனுமதி பெற்றுக் கொண்டோம்.

 

பின்னர் நான், என் கணவரிடம், "தியானத்தின் மூலமாக நான் எவ்வளவோ பிரச்சனைகளை சரிசெய்து கொண்டிருக்கிறேன். தியானத்தின் மூலமாகவே இதையும் சரி பண்ணிவிடுவேன்" எனக்கூறி விடியற்காலை 3 மணி நேரமும் சமையலுக்கு பின் 2 மணி நேரமும் தியானம் செய்ய ஆரம்பித்தேன். 3வது நாள் எனக்கு 'பீட்டர் ஹேன்டர்சன்' என்ற ஆஸ்ரடல் மாஸ்டர் வந்து இருதயத்தில் உள்ள ரத்த நாளத்தை எடுத்து சுத்தம் செய்ததை தியானத்தில் உணர்ந்தேன். அந்த நொடியிலேயே என் இருதயத்திலுள்ள நோய் போய்விட்டது. அதன் பிறகு மருத்துவரிடம் செல்லவில்லை.

 

அன்றிலிருந்து, அதே நேரத்திற்கு தியானம் தவறாமல் செய்து வருகின்றேன்.

 

இது நடந்து 30 நாட்களுக்குப் பிறகு, பெளர்ணமி அன்று மெளன விரதம் இருக்க வேண்டும் என்ற தகவல் தியானத்தில் கிடைக்கப்பெற்றேன். அதன்பின் தொடர்ந்து 3 நாட்கள் மெளனம் கடைப்பிடித்தேன். பெளர்ணமி அன்று மட்டும் 10 மணிநேரம் தியானம் செய்தேன். 6 மணிக்குப் பிறகு நிறைய பிரச்சனைகள் ஆரம்பித்தன. 104F காய்ச்சல், உடல்வலி, ஏதாவது விழுங்கினால் தொண்டை வலி, இந்த துன்பங்களைத் தாங்க முடியாமல் 'யாராவது என்னை கொலை செய்தால் கூட பரவாயில்லை' என்று தோன்றியது. அதிக நேரம் தியனம் செய்வது நல்லது என்று எல்லோரும் சொல்வார்களே, நமக்கு ஏன் இவ்வாறு ஆகிவிட்டது என்ற கேள்வியுடன் நான் தியானத்தில் அமர்ந்து விட்டேன். அப்பொழுது ஷீரடி சாய்பாபா தென்பட்டார். அவர், "உனக்கு மிகப்பெரிய செயல்பாடு நடந்துள்ளது. ஆப்ரேசனுக்கு பிறகு உள்ள உடல்நிலை இது" என்று கூறினார். எனக்கு இதய நோய் வந்தபோது சரியான இரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால் என் மூளைக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு உடலில் பாதிபாகம் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டும், தொண்டையில் உள்ள உணவு குழாயில் வீக்கம் ஏற்பக்டு அதன் மூலமாக பெரிய பொருள்களை விழுங்க முடியவில்லை என்றும், இந்த உடல் சுத்திகரிப்பை டாக்டர். மைக்கேல் (ENT Specialist) என்ற ஆஸ்டரல் மாஸ்டர் செய்ததாக பாபா கூறினார்.

 

உண்மையாகவே 4 நாட்கள் நான் எதையும் சாப்பிட முடியவில்லை. இதனால், என் அனுபவத்தை, நானும் என் வீட்டுக்காரரும் தியானத்தின்பால் அசைக்க முடியாத நம்பிக்கை வைப்பதற்காக இவ்வாறு நடந்திருக்கும் என்று தோன்றுகிறது. இப்பொழுது உள்ள ஆரோக்கியமின்மை மட்டுமல்லாமல் இனிமேல் வரலாம் எனும் நோய்களைக்கூட தியானத்தினால் குணப்படுத்திக் கொள்ளலாம் என்பதனை இதன் மூலம் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

 

என் கணவரும் தியானத்தின் மூலமாக தனக்கு வந்த தைராய்டு நோயை குணப்படுத்திக் கொண்டார். சக்ர நாற்காலியில் நடைபிணமாக வாழ வேண்டிய நான், தியானத்தினை தொடர்ந்து செய்வதின் மூலமாக ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும், மற்றவர்களுக்கு தியானத்தை கற்பித்து ஆத்ம ஆனந்தத்துடன் சந்தோஷமாக வாழ்கிறேன்.

 

எனக்கு தியானம் கற்றுக் கொடுத்த கீதா மேடத்திற்கும், உலகிற்கே தியானம் சொல்லிக் கொடுக்கின்ற பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்களுக்கும் ஆயிரமாயிரம் நன்றிகள்.

 

நீங்கள் அனைவரும் தியானம் செய்து என்னைப்போல ஆனந்தமாக வாழுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

 

 

திருமதி. மாலதி மாணிக்கியாலராவ்

அஹமதாபாத்

Go to top