" நாம் தியானம் செய்வோம்.  அனைவருக்கும் தியானம் கற்பிப்போம் "

 

என் பெயர் என்.எஸ்.லட்சுமி. நான் செங்கல்பட்டில் வசிக்கிறேன். என் தங்கை மூலமாக நான் தியானத்தை 2005ம் வருடம் ஜனவரியில் பயின்று கொண்டேன். தியானத்தில் நான் நினைத்தது போல், என் மகனுக்கு, நல்ல குடும்பத்திலிருந்து மணமகள் கிடைத்தாள். பின், ஒருமுறை, என் தியானத்தில் 'உன் வீட்டில் ஒரு அதிசயம் நடக்கும்' என்று தகவல் வந்தது. நான் பணம் கிடைக்கும் என நினைத்தேன். கொஞ்சநாளில் என் மகளுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. 73 வருடங்களுக்கு பிறகு என் பாட்டியை அடுத்து, இதுபோல் என் மகளுக்கு இந்த அதிசயம் நடந்தது என்று என் அம்மா மற்றும் மாமா மூலம் அறிந்தேன்.

 

இரண்டு வருட தியானத்திற்குப்பின் திருமதி.சுனிதா அவர்கள் மூலம் எங்கள் வீட்டில் தியான வகுப்பு ஆரம்பித்து இன்று வரை சிறப்பாக நடைப்பெறுகிறது. என் மருமகளும் தியானம் செய்ய ஆரம்பித்த மறுவாரமே கர்ப்பம் தரித்தாள். என் தியானத்தில் பத்ரிஜி, 'உனக்கு பேத்தி பிறக்கும்' என்றார். அதன்படியே சுகப்பிரசவம் நடந்தது. நான் திருவண்ணாமலை தியான யக்னத்திற்கு சென்று முதன்முதலாக குரு பத்ரிஜி அவர்களைச் சந்தித்தேன். என் தியானத்தில் மலைகள், செடிகள், தண்ணீர் மேல் எல்லாம் நான் பறப்பது போல் கண்டேன். பின் 'பெங்களூரு பிரமிட் வேலி' சென்று தியானம் செய்தேன். அங்கு எனக்கு மிக அதிக அளவில் சக்தி கிடைத்தது. மூட்டு வலி குணமாகிவிட்டது. இதுபோல் பல யக்னங்களுக்கும் தியான வகுப்புகளுக்கும் சென்று வந்தால் நமக்கு நல்லது நடக்கும். எனக்கு 'பி.பி., சர்க்கரை" வியாதிகள் இருந்தன. ஆனால் இப்பொழுது ஒன்றரை வருடங்களாக, எந்த மாத்திரையும் இல்லாமல், எந்த டாக்டரிடமும் செல்லாமல் நலமாக இருக்கிறேன். இப்பொழுது, எனக்கு தலைவலி, சளி ஏதாவது வந்தால், 15 நிமிடம் தியானத்தின் மூலம் நிவாரணம் கிடைத்துவிடும்.

 

நாம் தியானம் செய்வோம்.

அனைவருக்கும் தியானம் கற்பிப்போம்.

 

என்.எஸ்.லட்சுமி

செங்கல்பட்டு.

Go to top