" எல்லா மருந்துகளையும் கைவிடவும். தியான சக்தி மட்டுமே குணப்படுத்தவல்லது "

 

சென்னை துறைமுகத்தில் மின்துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்று, சென்னை மகாகவி பாரதி நகரில், தியான பயிற்சி மையம் நடத்தி வரும் என் பெயர் பாண்டுரங்கன். அண்டை வீட்டில் வசிக்கும் தியான மாஸ்டர் திருமதி.பிரேமா அவர்கள் மூலம், 41 நாட்கள் 'அனுமான்சாலிசா' பயிற்சி செப்டம்பர் 24/2009 சென்னை மணலி ஹாஸ்டலில் செய்ய பரிந்துரைக்கப் பட்டேன். 8 வருட காலமாக எனக்கு சர்க்கரை நோய் இருந்தது. தினம் ஒரு மணி நேரமும், ஞாயிறு அன்று 2 மணி நேரமும் இடைவிடாது 'ஆனாபானசதி' தியானம் மேற்கொண்டேன். 30வது நாளின் சர்க்கரை நோயால் சரியான பசி எடுத்தது. அன்று இரவு மட்டும் 3 முறை ஆகாரம் எடுத்து உடலின் குளுக்கோஸ் தேவையை சமாளிக்க நேர்ந்தது. மறுநாள் முதல் மாத்திரைகளை சுத்தமாக நிறுத்தி விட்டேன். தியானம் மட்டும் சிறிது அதிக நேரம் மேற்கொண்டேன். மாத்திரைகளை நிறுத்தி 150 நாட்கள் ஆகின்றன. அதன்பின் எவ்வித தொந்தரவும் ஏற்படவில்லை. எல்லா வருடத்தைப் போலவே, இவ்வருடம்(2009) டிசம்பர் 25 முதல் 31 வரை ஸ்ரீசைலம் எனும் இடத்த்ல் 'தியான மஹாயக்னம்' பத்ரிஜி அவர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு நான், என் மனைவியுடன் சென்று கொண்டிருந்தபோது, விடியற்காலை 4 மணியளவில் தேனீர் அருந்த பேருந்து நிறுத்தப்பட்டது. மற்றவர்களுடன் நானும் இறங்கினேன். அந்த இடத்தில் தேனீர் சரியில்லை என்று நண்பர்கள் கூறினார்கள்.

 

எனவே எதிரிலுள்ள கடைக்கு செல்ல சாலையை கடக்க எண்ணினேன். சாலையில் கான்கிரீட் ரோடு ஒரு பாதியில் அமைக்கப்பட்டிருந்தது. விளக்கொளியில்லாததால், சாலையைக் கடக்க எத்தனித்த நான், 8 அங்குல உயர சாலையிலிருந்து தடாலென தடுக்கிக் கீழே விழுந்தேன். கண்ணாடி ஒருபக்கம், செருப்பு மறுபக்கம் என விழுந்தது கூடத் தெரியவில்லை. வலதுகால் கட்டை விரலும், முன்கால் மூட்டும் மிக அதிகமாக காயப்பட்டு, சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் வடிந்தது. 'நாம்தான் குருஜி பத்ரிஜியை பார்க்க போகிறோமே. ஏன் இப்படி நடந்தது? நாம் வருவதை அவர் விரும்பவில்லையா? இப்படியே திரும்பி விடுவோமா?' என பலவாறாக எண்ணியது மனம். காயத்தை துடைக்கக்கூட இல்லை. அப்படியே விட்டு விட்டேன்.

 

சென்னை திரும்பியதும் ஏழு நாள் குளியலில் தண்ணீர் காயத்தின் மேல் நன்றாகப்பட்டது. தினமும் விடியற்காலை 3 மணி நேரம் தியானம் செய்தேன். 7வது நாள், என் காயம் நன்றாக ஆறிவிட்டது. அப்பொழுதுதான் எனக்கு தெரிந்தது. பிரம்மர்ஷி எனக்கு செய்தி சொல்லியுள்ளார் என்று. அதாவது எந்த மருத்துவமும் இல்லாமல் தியானம் மூலமே வியாதிகளை குணப்படுத்திக் கொள்ள முடியும் என்ற அவரது 7வது கொள்கை மகத்துவம் வாய்ந்தது என்று.

 

அதன்பின், ஒருமுறை நாங்கள் சென்னையில் குருஜி பத்ரிஜியை சந்தித்தபோது ஸ்ரீசைலம் வந்ததை கூறினோம். "அங்கு உங்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்பட்டிருக்குமே?" என வினவினார். என்னையும் தன் சீடராக ஏற்றுக்கொள்ள அவர் அரங்கேற்றிய நாடகமே இது என நான் அறிந்து கொண்டேன். அப்போது நான் எய்திய புளகாங்கிதத்திற்கு அளவேயில்லை. இப்போது எங்கள் மையத்திற்கு வியாதியுடன் வருபவர்கள், நன்கு தியானம் செய்து தங்கள் நோய்களை தீர்த்து கொள்வதைக் கண்கூடாகக் காண்கிறேன்.

 

பிரம்மானந்தம் அடைகிறேன்.

 

என்றென்றும் அவர் சேவையில்.

 

இரா.பாண்டுரங்கன்

சென்னை

Go to top