" இளைஞர்கள் கட்டாயமாக தியானம் செய்ய வேண்டும் "

 

 

தியானிகளுக்கும் தியானம் செய்ய விரும்பும்
அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்.

 

நான் ஒரு வருடமாக "ஆனாபானாசதி" தியானத்தை செய்து வருகின்றேன். இந்த தியானம் மிகவும் எளிதானது. எனது 15 வயதில் தியானம் என்னவென்று முதன் முதலில் அறிந்தேன். ஆனாலும், எனது 22வது வயதில்தான் தியானத்தைக் கற்றக்கொண்டேன். தியானத்தால் ஏற்படும் பலன்கள் வார்த்தைகளால் சொல்வதற்கு இயலாது. இந்த ஒரு வருட தியான சாதனையால், எனது வாழ்க்கையே மாறி விட்டது. எனக்கு முழுமையான ஆரோக்கியம் கிடைத்துள்ளது. (மனம் மற்றும் உடல்) அறிவுத் திறன் அதிகரித்துள்ளது. தன்நம்பிக்கை வளர்ந்து, வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அலைபாயும் மனம் அரை மணி நேரத்தில் வெற்றிடம் ஆகிறது.

 

இளைஞர்கள் கட்டாயமாக தியானம் செய்ய வேண்டும். இளம் வயதில், தங்கள் மனதை ஒரு முகப்படுத்த, தியானம் பேரளவில் உதவும். மனித வாழ்வில் மிகவும் முக்கியமான பருவம், இளைமை பருவம் தான். இந்த பருவம் தான் அவன் வாழ்க்கையை வடிவமைக்கும். தனது எதிர்காலமே, இந்த பருவத்தில் அவன் செய்யும் செயல்களின் படி அமையும். ஒரு இளைஞன், தியானம் செய்வதால் அவனுடைய உடல் வலிமையாகும். மனம் உறுதிப்படும், அறிவு கூர்மை ஏற்படும். முழுமையான ஆரோகியம் கிடைக்கும்.

 

தியானத்தின் சிறப்பும், அற்புதங்களும் எண்ணிலடங்கா! தியானம் ஆத்மதரிசனம் அளிக்க வல்லது. தியானம் மதத்திற்கு அப்பாற்பட்டது. தியானம் செய்யுங்கள் இப்பிறவியின் அற்புதத்தை அறிவிர்கள். வாழ்க தமிழகம். வாழ்க இந்தியா.
வளர்க ஆனாபானாசதி தியானம்.

 

ஐயப்பா

சென்னை

Go to top