" நீ தியானம் செய்தால் கடவுளிடம் நேரடியாக உரையாடலாம் "

 

என் பெயர் பூவிதா. நான் மூன்றாம் வகுப்பு படிக்கின்றேன். நான், கடந்த 10 மாதங்களாக தியானம் செய்து வருகிறேன். எனக்கு சென்னை, நெற்குன்றத்தில் உள்ள பிரமிட் ஆசான் திருமதி. பிரசாந்தி சந்திரசேகர் அவர்கள் தியானத்தைக் கற்றுத் தந்தார். தியானத்திற்குமுன் எனக்கு அடிக்கடி ஜல தோஷம் ஏற்படும். கஷ்டப்பட்டு படித்துததான் 'ஏ' கிரேட் வாங்க முடிந்தது. ஆனால் இப்பொழுது தியானம் செய்யத் துவங்கியதிலிருந்து எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி விட்டதால் எந்த நோயும் வருவது இல்லை. எனக்கு எப்போதாவது வரும் சளி, காய்ச்சல், வாந்தி போன்ற நோய்களுக்கு நான் தியானம் மட்டுமே செய்து, குணமாகி வருகிறேன். எனக்கு தியானத்தில் பிரம்மர்ஷி பத்ரிஜியுடன் பேசும் அனுபவம் கிடைத்தது. அவர், எனக்கும், என் குடும்பத்தினருக்கும் நிறைய அறிவுரைகள் வழங்கி இருக்கிறார். நாங்கள் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டோம். நான் 'கேக்' கூட இப்போது சாப்பிடுவது இல்லை. வீட்டில் அசைவம் சமைத்த பாத்திரங்களை எல்லாம் மாற்றி விட்டு, புது பாத்திரங்களை வாங்கி சமையல் செய்ய ஆரம்பித்துள்ளோம். இன்று என்னால் மிகவும் சுலபமாகப் படிக்க முடிகிறது. ஆகவே, சிறுவர் சிறுமியர்கள் கண்டிப்பாக தியானம் செய்ய பழகி, மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தியானத்தில் பத்ரிஜி எனக்குத் தந்த முக்கிய தகவல்களில் சில.

 

1) கண்டிப்பாக எல்லோரும் அதிகமான நேரம் மெளனமாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.

 

2) புதிதாக கட்டிய கோவில்களுக்கு தியானம் செய்பவர் செல்லக்கூடாது. அங்கு தியானம் செய்தால் உங்கள் சக்தி வீணாகிவிடும். மாறாக மிகவும் பழைமை வாய்ந்த கோவில்களுக்கு சென்றால் அதிக சக்தி பெறலாம்.

 

3) ஆஞ்சநேயரையும், சிவபெருமானையும் வழிபாடு செய்யலாம். ஏனெனில் அவர்கள் எப்பொழுதும் தியானிப்பவர்கள்.

 

4) கடவுள் - பேப்பர், தியானம் - பேனா, நீ தியானம் செய்தால் கடவுளிடம் நேரடியாக உரையாடலாம். வெறும் பேப்பரால் நீ ஒன்றும் செய்ய முடியாது. பேனாவின் உதவியோடு பேப்பரில் நீ விரும்பியதை எழுதலாம், வரையலாம்.

 

 

பேபி. பூவிதா பாலசிங்கம்

சென்னை.

Go to top