" வயதில் முதிர்ச்சி, உள்ளத்தில் இளமை "

 

என் பெயர் ராமச்சந்திரன். நான் இலங்கையிலுள்ள கொழும்புவில் வசிக்கிறேன். நான் தியானத்தை என் அண்ணன் மகள் தேவி பாலசிங்கம் வாயிலாகக் கற்றுக்கொண்டேன். பின்னர் ஒருநாள் நெற்குன்றத்திலுள்ள திருமதி. பிரசாந்தி சந்திரசேகரிடம் சென்று, அவர்களின் பிரமிட்டில் தியானம் செய்த போது, என் அகக்கண்ணில் ஏற்பட்ட அனுபவங்களுக்கு பிரசாந்தி அவர்களிடம் விளக்கம் கேட்டு, தெளிவு பெற்றேன். அதன்பிறகு தொலைபேசி மூலம் மற்ற சந்தேகங்களுக்கு அவர்களிடம் விடைகள் பெற்றுக்கொள்வேன். அதன் பின்னர் வீட்டிலும், கடையிலும் 'பிரமிட்' வாங்கி வைத்து அதனுள் தியானம் செய்வேன். நான் பக்தியில் ஈடுபாடு உள்ளவன். தினமும் பூஜை, கோவில் என்று இருப்பேன். கடவுள்கள், இயற்கைக் காட்சிகள், குழந்தைகள் முதலியான என் அகக்கண்ணில் காட்சியாகத் தெரியும். தியானத்திற்கு முன்னர் எனக்கு கழுத்து வலி (செர்வைகல் ஸ்பான்டைலைட்டிஸ்) சைனஸ், அலர்ஜி பிரச்சனைகள், மன அழுத்தம் போன்ற நோய்கள் இருந்தன. கடைக்குச் சென்றால், வேலையில் 'டென்ஷன்' போன்றவை ஏற்பட்டு, எப்போதும் மனம் அமைதியில்லாமலேயே, இருக்கும். ஆனால் இப்போது தியானம் செய்ய ஆரம்பித்த பிறகு, எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை என்னாலேயே நன்றாக அறிய முடிகிறது. என் ஐம்பது வருட வாழ்க்கையில் எனக்கு இப்போது இளமை திரும்பிவிட்டது போல் ஆரோக்கியமாக இருக்கின்றேன். முன்பெல்லாம் எப்போதும் மாத்திரைகள், எரிச்சல்கள், அலுப்புகள் மற்றும் மன விரக்தியுடன் இருந்துள்ளேன். ஆனால் இன்று தியானத்தின் உதவியால் மனம், உடல், ஆரோக்கியம் பெற்று சலிப்படையாத வாழ்க்கை வாழக் கற்று கொண்டு, மனநிறைவுடன் வாழ்ந்து வருகிறேன். என் குடும்பத்தினர் அனைவரும் அசைவம் உண்பதை விட்டுவிட்டனர். இன்று நான் எப்பொழுதாவது மாத்திரை எடுத்து கொள்கிறேன். டாக்டரிடம் செல்வதும் குறைந்துவிட்டது.

 

இந்த அருமையான வரப் பிரசாதமாகிய தியானத்தை முன்பே கற்றுப்பயின்று வந்திருந்தால் என் வாழ்க்கை எவ்வளவோ பயனுள்ளதாக இருந்திருக்குமே இத்தனை வருடம் வீணாகி விட்டதே என்ற குறையால், தினமும் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும், மதியம் , இரவு என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியானம் செய்கின்றேன்.

 

இந்த தியானத்தை உலகிற்கு தந்த புத்தருக்கும், உலக குருஜி பிரம்மரிஷி பத்ரிஜிக்கும் கோடானகோடி நன்றிகளை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

திரு. இராமச்சந்திரன்

கொழும்பு

இலங்கை

Go to top