" உன்னை நீ அறிந்து கொள் "

 

என் பெயர் சத்தியபாமா. எங்கள் ஊர் மதனபள்ளி. நான் 'ஆனாபானாசதி' தியானத்தை சென்னை பிரமிட் மாஸ்டர், (என் சகோதரி) திருமதி. இராஜேஸ்வரி அவர்கள் மூலமாகக் கற்றுக்கொண்டேன். 2006 பிப்ரவரி 3ம் தேதியிலிருந்து தியானம் செய்கிறேன். மண்டல தியான வகுப்பிலிருந்து என்னுடைய தியான வாழ்க்கை ஆரம்பித்தது. அந்த மண்டல தியானம் நிறைவு பெறுவதற்கு முன்பே நிறைய தியான அனுபவங்கள் கிடைத்தன. ஆக்ஞா சக்கரம் செயல் புரிய ஆரம்பித்தது. பின்னர், ஜுன் மாதத்தில் சேலத்திலுள்ள பிரமிட் தியான மன்ற திறப்பு விழாவிற்கு திருமதி. பாரதி (என் அண்ணி) என்னை அழைத்தார்கள். அங்கு, என் அக்கா இராஜேஸ்வரி மூலமாக, நம் குருவான பத்ரிஜி அவர்களின் அறிமுகம் ஏற்பட்டு, என்னுள் இருந்த துக்கத்தை அகற்ற முடிந்தது. மறுநாள் குருஜியின் தியான வகுப்பில் என்னுடைய சுவாசத்தை கவனித்தேன். என்னுடைய "சகஸ்ரார" ஆயிரம் இதழ் தாமரை தரிசனம் கிடைக்கப் பெற்றேன். வகுப்பின் நிறைவில், "குருஜி என் அருகில் வந்து என் அனுபவம் என்ன?" என்று கேட்டார். நானும் கூறினேன். அதற்கு அவர், "நீங்கள் உங்களுடைய சகஸ்ராரத்தை தரிசனம் செய்திருக்கிறீர்கள்" என்று கூறினார். நான் பரீட்சையில் முதல் மதிப்பெண் பெற்றது போல் சந்தோஷப்பட்டேன். அதன் பின்னர், என்னுள்ளிருந்து "ஆன்ம ப்ரபோதம்" பாடல் ரூபமாக 10 பாடல்கள் வரை என்னால் எழுதமுடிந்தது. ஆனந்தமாகப் பாடிக்கொண்டிருக்கிறேன். எனது ஞானத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று எனக்கே தெரியவில்லை. அதனை செயல் படுத்தவேண்டும் என்ற எண்ணமும் தோன்றவில்லை. ஆனால், எப்பொழுதுமே ஏதோ ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்ற ஆவல் மட்டும் இருந்து கொண்டே இருந்தது.

 

2008 ஜனவரி 2ம் தேதி பத்ரிஜி அவர்கள், மதனபள்ளி பிரமிட் திறப்பு விழாவிற்கு வந்தபொழுது, என்னிடம் 'சொல்லுங்க மேடம்' என்றார். அதற்கு "உங்கள் கையில் ஒரு கருவியைப் போல் நான் வேலை செய்ய வேண்டும் என்றும் உங்களுடன் சேர்ந்து பாடல் பாட வேண்டும் என்றும் இருக்கிறது என கூறினேன். ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. நீங்களே என்னை செயல்படுத்த வேண்டும்" என்றேன். எனக்குத் தெரியாமலேயே அந்த வார்த்தைகள் வந்தாலும், 18 மாதங்களுக்குப் பின் அது நிரூபணம் ஆனது. இந்த சமயத்தில் என்னுடைய உடல் ஆரோக்கியம் குறைந்திருந்தது. நான் என்னுடைய வீட்டு வேலைகளைக்கூட சரியாக செய்ய முடியாமல், அனைத்தையும் தியானத்திற்கே அர்ப்பணித்து மிகவும் அதிக அளவில் தியானம் மேற்கொண்டேன். என் அக்கா, இராஜேஸ்வரியுடன் என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது அவர்கள், எது கூறினாலும், சில சமயங்களில், அந்த வார்த்தைகள் கஷ்டமாகத் தோன்றி என் கண்களில் நீர் வரும். ஆனால், தியானம் செய்யும்போது அந்த வார்த்தைகளை ஞாபகப்படுத்திக் கொண்டு, என் தவறுகளை திருத்திக்கொள்வேன். மற்றவர்களைப் பற்றி கற்பனை செய்து தீர்மானிக்கக்கூடாது (Judge ye not) என்பதை புரிந்து கொண்டேன். "உன்னை நீ அறிந்து கொள்". சத்தியம் பேசு என்பதெல்லாம் சூட்சுமமாக புரிகின்றது. அன்றாட வாழ்வில் சத்தியத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்றும் தெரிந்தது. "சத்யம் வதா தர்மம் சரா" சத்யத்தை வதைத்து விட்டோம் என்றால் தர்மம் நம்மை சிறைபிடித்து விடும்.

 

சத்யம் தெரிந்தும் அங்கே உங்கள் தர்மத்தை கடைப்பிடிக்காமல் இருந்தால், சத்யமே உங்களை வதைத்து விடும். தர்மம் உங்களை சிறைப்பிடித்துவிடும். கர்மபலன்களை அனுபவிக்கும் போது "எதற்கு இப்படி அனுபவிக்கிறோம்" என்று கூட புரிந்துகொள்ள மாட்டோம். ஞானமும் பெறமுடியாது.

 

வைரத்தை தூய்மைபடுத்தாவிட்டால் வைரம் ஜொலிக்காது. இரும்பை தீயிலிடாமல் இருந்தால், கருவிகளைச் செய்ய முடியாது. அதுபோல, தெய்வீக ஆற்றலுடன் இறைத் தொடர்பு ஏற்படுத்தி கொள்ள வேண்டுமானால், விஸ்வ திட்டத்தில் பங்கு கொள்ள வேண்டுமானால், நமக்குள் நாம் செல்ல வேண்டும். ஆன்மாவை சுத்திகரிக்க ஆரம்பித்தால் கர்மாவும் சுத்தப்படுத்தப்படும். நமக்கு இவ்வளவு மார்க்கதரிசியாக இருக்கும் பத்ரிஜியியை பார்த்து ஒவ்வொரு நிமிடமும் கற்றுக்கொண்டு முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். எப்பொழுது என்னை நான் திருத்திக் கொண்டு பிரகாசிக்க வேண்டும். விஸ்வ சக்தியுடன் இரண்டறக்கலந்த ஆன்மாவாக, விஸ்வ ஆத்மாவாகப் பரமாத்மா செய்யும் வேலையை செய்ய வேண்டும் என்று தீவிரமான வேட்கை ஏற்பட்டதும், திரும்பி என்னுள் இருந்து அகத்தகவல்கள் வர ஆரம்பித்தன. இம்முறை எனக்கு, ஆன்மா விழிப்புணர்வுடன் கூடிய தகவல்கள், 'ஆன்ம பிரபோத'த்திற்கு தியானத்தின் மூலம் சக்தியை கொடுக்க வேண்டும் என்று உணர்த்தின.

 

"மனநலம் குன்றியவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களை பற்றியும் வந்த தகவல்களை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும்" என்று தியானத்தில் எனக்கு கிடைத்த தகவல்கள் எல்லாவற்றையும் உங்கள் முன்வைக்கிறேன்.

 

மனநலம் குன்றியவர்கள் எதை அடையவேண்டும் என்று இப்புவியில் பிறவி எடுக்கிறார்கள்? அவர்கள் ஆன்ம நிலை எப்படி இருக்கும்? ஆன்மிக முன்னேற்றம் எப்படி ஏற்படும்? இக்கேள்விகள் அனைத்துமே என்னுள் சுழன்று கொண்டே இருக்கும். கண்களை மூடி தியானம் செய்யும்போதுகூட எனக்கு தெரிந்த இம்மாதிரி குழந்தைகளே கண்ணில் தெரிகின்றனர். சிலருக்கு எதுவுமே தெரியாத நிலை. சிலருக்கு சொன்னால் கேட்பார்கள். அதிலும் நிலைகள் உள்ளன.

 

உகாதி பண்டிகைக்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஒற்றுமை தியானத்தின் முடிவில், "சூரியனில் தொடர்பு ஆகிவிட்டாய்" என்று எனக்கு உள்ளிருந்து தகவல் வந்தது.

 

முழு மனிதன் (பரிபூரணமான மனிதன்):

பிரமிட் சக்தி + சூரிய சக்தி + (உயிர்) பிரபஞ்ச சக்தி இவை மனநலம் குன்றியவர்களை நல்வழிப்படுத்த முடியும். மனநலம் குன்றியவர்களுக்குத் தேவையான, மிகவும் முக்கியமான சக்தி கிடைக்க வேண்டிய தருணம் இது. ஜுபிடர் இரண்டாவது சூரியன் போல வருவதற்குக் காரணம், இதுபோன்ற மனிதர்களுக்கு உபயோகமாக இருக்கத்தான். இங்கே இவர்கள் பெளதீகமாகவும், ஆன்மிகமாகவும் இவ்விரண்டு விதங்களிலும் முன்னேறி வருவார்கள். தினமும் அவர்களின் வயது எவ்வளவு உள்ளதோ அதற்கு ஒன்றரை மடங்கு காலை, மாலை (சூரியோதயம், சூரிய அஸ்தமனம்) சூரிய சக்தி கிடைக்கும்படி அவர்களின் உடல் சூரிய கிரணங்களை தாங்கும் அளவிற்கு உட்கார்ந்து தியானம் செய்தால் நாளடைவில் நல்ல மாற்றம் ஏற்படும். அதுவும் முடியாதவர்கள் அந்த சமயத்தில் அங்கு இருந்தால் மட்டும் போதும். அவர்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்கள் ஏற்படும். இதல்லாமல் பிரமிட்டிலும் அமர வேண்டும். இப்படி பிரமிட் உள் அல்லது பிரமிடின் கீழே அமரும்போது "தியானம் என்றால் சுவாசத்தின் மீது கவனம்" என்று அறியாதவர்கள் கூட, அந்த நிலைக்கு முன்னேறி வருவார்கள். இது மட்டுமல்லாமல், கர்ப்பிணி பெண்களும் மூன்று மாதம் தொடக்கத்திலிருந்து அவர்களின் வயது எவ்வளவோ அதற்கு ஒன்றரை மடங்கு தினமும் காலை, மாலை சமயத்தில் சூரிய சக்தி கிடைப்பது போல தியானம் செய்தால் மனநலம் குன்றிய குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பே இல்லை. இது சத்தியம்.

 

மனநலம் குன்றிய நிலை எதற்கு, ஏன் எப்படி ஏற்படுகிறது? கர்ப்பத்தில் குழந்தை வளரும் போது, அந்தத் தாய் விபரீதமான மன அழுத்தத்தால் இயற்கைக்கு புறம்பாக இருத்தலினாலும், அன்பு தத்துவம் குறைந்து இருந்தாலும், மனவளர்ச்சி குன்றிய குழந்தை உருவாகலாம். எவ்வளவு வைட்டமின்கள், மருந்துகள் எடுத்துக் கொண்ட போதிலும் அந்தத் தாய் இயற்கையுடன் ஒன்றியிருக்க வேண்டும். அன்பு தத்துவத்துடன் முழுமை பெற்றிருக்க வேண்டும். தனக்குள் தானாகவே இருக்க வேண்டும். இது எல்லாமே ஒருவருக்கு ஏற்பட வேண்டும் என்றால், தியானம் ஒன்றே மிகச்சிறந்த வழி. அதனால் கர்ப்பிணிகள் தியானம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். மற்றைய பெண்கள் கர்ப்பம் தரிக்கும் முன்பே கணவனும், மனைவியும் தியானம் செய்து கொண்டே இருந்தால், (தன்னைத்தான் தெரிந்து கொண்டே வந்தால்) அந்த பெண் கர்ப்பம் தரித்தபின் தன்னுடைய ஆன்ம சக்தியோடு உன்னதமான குழந்தையை எளிதாகப் பெற்றெடுக்க முடியும்.

 

'மனம்' என்ற ஒரு வட்டத்துக்குள் சிக்கியவர்கள் அனைவருமே மனநலம் குன்றியவர்கள்தான். இவர்கள் அனைவருமே சூரிய சக்தியை எடுத்துக் கொண்டால் ஆன்மிக முன்னேற்றம் அடையலாம். இது ஒரு பொன்னான கால கட்டமாகும். அதனால் ஒவ்வொருவரும் பிரமிட் சக்தி, பிரபஞ்ச சக்தி, சூரிய சக்தி முதலியவற்றை கண்டிப்பாக எடுத்தக் கொண்டு, உன்னத வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

 

 

திருமதி. சத்தியபாமா கிருஷ்ணமூர்த்தி

மதனபள்ளி, ஆந்திரா

Go to top