" தியானம் மிகவும் இன்றியமையாதது "

 

வணக்கம்,


நான் செப். 24, 2002 முதல் "ஆனாபானாசதி" தியானம் செய்து கொண்டு இருக்கிறேன். எனக்கு 15 வருடங்களாக, ஒற்றை தலைவலி இருந்து வந்தது. தலைவலி வந்தால், என் குழந்தைகளையும், கணவரையும், வீட்டு பொறுப்புகளையும் கவனிக்க இயலாது. அந்த சமயத்தில் என் முழு நினைனவையும் இழந்து விடுவேன். ஒரு நாள் திரு. சங்கர்லால் அவர்கள், மேற்படி தியான முறை பற்றி என்னிடம் கூறினார். அப்பொழுது, என்னுள் ஒரு சிறு நம்பிகை பிறந்தது.பிறகு, பிரமிட் மாஸ்டர் தீபக் (மைசூர்) அவர்கள் மூலமாக, சேலம் பிரமிட் தியான மன்றத்தில், மேற்படி தியானத்தை பயின்றேன். ஆனாலும், என்னுள் ஒரு கேள்வி. இந்த தியானத்தின் மூலம் பிரச்சனைகள் நீங்குமா?

 

நான் தொடர்ந்து தியானம் செய்து வந்த போது 36 மாதங்கள் கழித்த பின், ஒரு நாள் ஒரு "ஒளி" தெரிந்து. நான் அந்த ஒளி பின் தொடர்ந்து சென்ற போது, என் முன் பிறவியை (past life ) அறிந்தேன். பிறகு, சிவலிங்கம் தோன்றி, "நீ" பிரம்ம வித்தியாம்பிகை, சுந்திரசூடேஸ்வரர் "ஆகிய இரு தலங்களுக்கு சென்று தரிசித்து வா" என்று சென்னார். நான் இதற்கு முன் இந்தப் பெயர்களை கேட்டதில்லை. நான் எனது வீட்டின் அருகில் வசிப்பொரிடம் இத்தலங்கள் பற்றிக் கேட்டு அறிந்தேன்.நான், தலைவலியால் அவதிபட்டபோது, எடுத்து கொண்ட மாத்திரைகளின் கெட்ட பலனால் "நரம்பு தளர்ச்சி" ஏற்பட்டது. கும்பகோணம், புதன் பகவான் கோவிலுக்கு சென்ற போது, அந்த கோவிலின் தாயார் பெயர், "பிரம்ம விதியாம்பிகை" என்று மிகவும் ஆச்சர்யமும், கோவிலில் மகிழ்ச்சியும் அடைந்தேன். அங்கு "நரம்பு தளர்ச்சிக்கு" விளக்கு ஏற்றிவைக்கவும் என எழுதியிருந்தார்கள்.

 

இப்போது நான் பூரண குணம் அடைந்துளேன். என் வாழ்கையும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. "ஆனாபானாசதி" தியான ஸ்தாபகர் பிரம்மஸ்ரீ சுபாஷ் பத்ரி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.


நம் வாழ்க்கையில் தியானம் மிகவும் இன்றியமையாதது, எல்லோரும் பயின்று பயன் பெறுங்கள்.

 

திருமதி. ஷர்மிளா

சேலம

Go to top