" புத்தகங்களின் முக்கியத்துவம் "

 

என் பெயர் வம்சி கிருஷ்ணா. வயது 25. என்னுடைய ஊர் நெல்லூர், ஆந்திரப்பிரதேசம். என்னுடைய பணியின் நிமித்தமாக சென்னையில் இருக்கின்றேன். பிரமிட் ஸ்பிரிட்சுவல் சொசைட்டி பற்றி எனக்கு 2009, மார்ச் மாதம் தெரிந்தது. ஆனால் அப்பொழுது நான் இதனை நம்பவில்லை. காரணம், இதற்கு முன் பல்வேறு ஆன்மிக மன்றங்களுக்குச் சென்று, எனக்கு திருப்தியும், நம்பிக்கையும் வரவில்லை. தெரிந்தவர் மூலமாக நான் மறுபடியும் 2010 பிப்ரவரியில் இதற்குள் பிரவேசித்தேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியானம் செய்ய ஆரம்பித்து விட்டேன். பிப்ரவரி 12 சிவராத்திரி, அன்று முழு இரவும், தியானமும், சத்சங்கங்களும் நடக்கும் என்பதையறிந்து நானும் கலந்து கொண்டேன். இரவு ஒன்றரை மணிக்கு சத்சங்கம் முடிவு பெற்றது. 2 மணி முதல் 5 மணி வரை கூட்டு தியானம் செய்ய அமர்ந்தோம். எனக்கு அதுவரை அரை மணி நேரத்திற்கு மேல் தியானம் செய்ய முடியாது. அப்படி நீண்ட தியானம் செய்யும் போது நான் அசைந்து கொண்டே இருந்தேன். அரை மணி நேரம் கூட உட்காராமல், கண் திறந்து விட்டேன். எப்படியாவது தொடர்ந்து தியானத்தில் உட்கார வேண்டும் என்ற முடிவுடன் மீண்டும் அமர்ந்தேன். அப்பொழுது எனக்கு தியானத்தில் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்களை பார்க்கும் அனுபவம் கிடைத்தது. அவர், 'என்னடா உன்னால் உட்கார முடியவில்லையா? அந்த அம்மாவைப் பார். தியானத்தில் எவ்வாறு ஆடாமல் அசையாமல் அமர்ந்திருக்கிறார்' என்றார், அவ்வளவுதான். நான், பயத்துடன் கண்களைத் திறந்து விட்டேன். ஆனால் அங்கு யாரும் இல்லை. அந்த நிகழ்விற்குப் பிறகு தொடர்ந்து ஒரு மணி நேரம் தியானம் செய்ய முடிகிறது.சிலசமயம் தொடர்ந்து 3 மணி நேரம் கூட என்னால் தியானம் செய்ய முடிகிறது. அதே நாளில் மறுபடியும் தியானத்தில் நிறைய வெளிச்சங்களும், தீபத்தின் ஒளிகளும் தென்பட்டன. பயத்துடன் கண்களை திறந்தால் எதுவுமேயில்லை. யாரோ பெரிய குருமார்கள் வந்து எனக்கு சக்தி அளித்துச் சென்றுள்ளனர் எனப் புரிந்து கொண்டேன்.

 

2010 மே மாதத்தில், ஒரு நாள், என் அறையில் அமர்ந்து தியானம் செய்யும் போது யாரோ அந்த அறையில் நடமாடுவது தெரிந்தது. நான் தியானத்திற்கு முன்பே அறையை பூட்டிவிட்டுத் தான் அமர்ந்தேன். மறுபடியும் கண்களை திறந்தால், அங்கு யாருமே இல்லை. இதே போல 2010 ஆகஸ்டில் ஒரு நாள் தியானத்தின் போது பூமி அதிர்வது போல் உணர்ந்தேன். யாரோ பெரிய குருமார்களின் பாத அடி கேட்டது. ஆனால் யார் என்று தெரியவில்லை. தியானத்தில் எந்த அனுபவமும், சந்தேகங்களும் வந்தாலும், எனக்கு சீனியர் மாஸ்டர்களின் மூலம் பின்பு அவற்றின் காரணம் கிடைத்துவிடும்.

 

என்னுடைய சுபாவம் எப்படி என்றால், கெடுதலை முதலில் பார்த்த பின்னர் தான் ஒரு வேலையை ஆரம்ப்பிபேன். எதிர்மறையான எண்ணத்துடன் தான் கஷ்டநஷ்டங்களை யோசிப்பேன். அதனால் நல்லதை காட்டிலும் கெட்டதே அதிகமாக நடைப்பெற்றது.

 

தொடர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து, "ரோண்டா பைர்ன்" எழுதிய "தி சீக்ரெட் (இரகசியம்)" என்ற புத்தகத்தினை படித்ததின் மூலமாக அந்த சுபாவத்தை மாற்றிக் கொண்டேன். இப்பொழுது எல்லாம் நல்லவிதமாக நடக்கிறது, இப்பொழுது எனக்குள் நேர்மறையான எண்ணம், தன்னம்பிக்கை, நோய் எதிர்ப்பு சக்தி, முதலியன அபாரமாக வளர்ந்துவிட்டன. இதற்கு முன் சில நோய் தொந்தரவுகள் இருந்தன. இப்பொழுது அவை எதுவுமே கிடையாது. முக்கியமாகக் கோபம் குறைந்து விட்டது.

 

காஞ்சிபுரம் தியான யக்ஞத்தில் எனக்கு உள்ள எதிர்மறையான எண்ணம் ஏன் என்னைவிட்டு அகவில்லை என்ற கேள்வியுடன் தியானத்தில் அமர்ந்தேன். அப்பொழுது, தியானத்தில் 10 நிமிடத்துக்குள் எனக்கு ஒரு காட்சி தென்பட்டது. 'இடுப்பு கூன் விழுந்து மூதாட்டி ஒருவர், இரு கடைக்கு வந்து, இரு பொருளைக் கேட்டார். அந்த கடைக்காரர், பொருள் இல்லை என்று திருப்பி அனுப்ப முற்பட்டபோது அங்கிருந்த நான் கடைக்காரரிடம் அந்தப் பொருள் உள்ளது எனக் கூறி அதை கொடுக்கச் சொன்னேன். கடைக்காரரும் நான் சொன்ன பிறகு பொருளை கொடுத்துவிட்டார். 'இது என் தியான அனுபவக் காட்சி. இதனைப் பற்றி சீனியர் ஒருவரிடம் கேட்கும் போது எனக்கு தெளிவாக விவரித்தார்.

 

மூதாட்டி(எதிர்மறையான எண்ணங்கள்) அவருக்கு தேவையானது (எதிர்மறை எண்ணம்) கடைக்காரர் (மாஸ்டர்) கிழவிக்கு தேவையானதை மாஸ்டர் இல்லை என்று கூறினார். ஆனால் நான் அந்த பொருள் (எதிர்மறை எண்ணத்திற்கான சக்தியை) மாஸ்டரிடம் சொல்லி எடுத்து கொடுக்க கூறினேன். இதற்கு அர்த்தம் நான் எதிர்மறை எண்ணங்களை கவனிக்காமல், அதன் பின்னால் செல்கிறேன். அதனால் என்னுள் எதிர்மறை எண்ணம் தங்கிவிட்டது. அது போகவில்லை என்ற விளக்கத்தினை சீனியர் மாஸ்டர் எனக்குக் கூறினார்கள்.

 

முன்பு எனக்கு அசைவம் மிகவும் பிடிக்கும். தியானத்திற்கு பின் புத்தங்களைப் படிப்பதன் மூலமும், சீனியர்களின் உரைகளைக் கேட்ட பின்னும், அசைவம் உண்ணுவதை விட்டுவிட்டேன். முதலில் அசைவம் ஆசை இருந்தது. ஆனால், தியானம் செய்யச் செய்ய எனக்கு அசைவத்தின் மேல் இருந்த விருப்பம் தானாகவே குறைந்துவிட்டது. இப்பொழுது நான் முழுக்க முழுக்க சைவ உணவிற்கு மாறிவிட்டேன்.

 

 

வம்சி கிருஷ்ணா

சென்னை

Go to top