" அனுபவமே ஒரு சிறந்த ஆசான் "

 

1998ல் உடல் நிலை சரியில்லாத சமயம் "ஆனாபானாசதி" தியானம் செய்யத் தொடங்கினேன் இரண்டு வாரங்களில், உடலில் நல்லமாற்றம் தெரிந்தது. பிறகு என் "அகக்கண்" மூலம் முன் ஜென்மங்களைத் தெரிந்துக் கொண்டேன். மேலுலக குருமார்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. "நான் யார்? உடல் என்றால் என்ன? பூமி என்றால் என்ன? மேல் உலகங்கள் இருக்கின்றனவா? மரணத்திற்கு பிறகு எங்கு செல்கிறோம்? இந்த ஆன்மீக பயணத்தில் நான் எங்கிருந்து வந்துள்ளேன்? பூமி நிலை தடுமறியிருக்கக் காரணம் என்ன? அனைவரும் தியானம் ஏன் செய்ய முடிவதில்லை?" என்ற கேள்விகளுக்கு தியானம் மூலம் பதில் கிடைக்கப்பெற்றேன்.

 

ஒவ்வவொரு கேள்விக்கும் பதிலை எனக்கு அனுபவரீதியில் புரிய வைத்தார்கள், குரு மார்கள்.

 

வேதங்கள் வாசிப்பவர்கள் நிறையபேர் வேதரகசியங்கள் சத்தியமானவை, அந்த வேதரகசியங்களை, கலி யுகத்தில், எடுத்துச்சொல்ல பிறப்பு எடுத்தூள்ளார், பிரம்மரிஷி சுபாஸ் பத்ரிஜி அவர்கள்.

 

இந்த பூவுலகத்திற்கு ஞான மார்க்கத்தைக் காட்ட லட்சக்கணக்கான ஆசான்கள்தேவை. பிரமிட் ஆன்மிக மன்றத்தின் ஸ்தாபகர் பிரம்மரிஷி பத்ரிஜி அவர்கள் தேவையான, மாஸ்டர்களை, ஆசான்களை, உலக முழுவதும், உருவாக்கும் மகத்தான பணியைச் செய்து கொண்டிருக்கிறார்.

 

"2008ஆம் வருடத்திற்குள் தியான பாரத்"
"2012ஆம் ஆண்டிற்குள் தியான உலகம்"
இவற்றை பத்ரிஜி உருவாக்குவார் என்பது உறுதி - உலகமே ஞான உலகமாக மாறும்.

 

வாழ்க தியானம்..... வளர்க ஆன்மீகம்

 

 

K. வரலட்சுமி

விஜயாவாடா

Go to top